Osho Friends Kumbakonam: ஓஷோ சன்னியாசிகளின் ஆடை நிறத்திற்கான காரணம் என்ன?

Saturday, July 8, 2023

ஓஷோ சன்னியாசிகளின் ஆடை நிறத்திற்கான காரணம் என்ன?

        

ஆரஞ்சு நிறம் வாழ்வை அடையாளப்படுத்துவது. இது இரத்தத்தின் நிறம். காலைக் கதிரவனின் அடையாளம். அதிகாலையில் கிழக்கு வானம் சிவக்கிறது. அது என் வாழ்வின் வலியுறுத்தல். ஆனால் நோக்கம் என்னவோ ஒன்றுதான்.

        நீங்கள் வாழ்வின் மீது தீவிர நேசம் கொள்ள வேண்டும் என்கிறேன் நான். அது உங்களுக்கு விழிப்புணர்வு தரும். வாழ வேண்டும் என்று தீவிர உணர்வு விழிப்புணர்வை உண்டாக்கிவிடும். 

        வாழ்க்கை ஒரு நினைப்பல்ல. மரணத்தைக் காட்டிலும் மனமற்று இருப்பதற்கு வாழ்வுதான் உதவும். வாழ்க்கை இங்கே இப்போது கைவசம் இருக்கிறது. மயானத்தைத் தேடிப் போக வேண்டியில்லை. - ஓஷோ.

No comments:

Post a Comment