இரண்டு பாதிரியார்கள் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இளையவர் சுலபமாகப் பந்தைத் தட்டிக் குழிக்குள் விழச் செய்யும் முயற்சியில் தோற்றுப் போய், ''ஷிட், '' என்று சளைத்து கொண்டார்.
வயதில் மூத்த இன்னொரு பாதிரியார் அப்படிப்பட்ட மொழியைப் பயன்படுத்தினால் கடவுள் உன்னை இடி கொண்டு தாக்கித் தண்டிப்பார் என்றார். விளையாடிக் கொண்டிருக்கும்போது இன்னுமொரு பந்தைத் தவறவிட்ட இளையவர் மீண்டும், ''ஷிட்,'' என்கிறார்.
திடீரென வானம் பிளந்து கொண்டது. மின்னல் வெடித்துக் கிளம்பி மூத்த பாதிரியாரை அடித்துக் கொன்றது. சற்று மெளனம். பிறகு கடவுளின் குரலில் ஒரு முணுமுணுப்பு: ''ஷிட்!''
உன்னிடமிருந்து உன் கடவுளர் வேறுபட்டவராக இருக்க முடியாது. யார் அவர்களைப் படைப்பது? அவர்களுக்கு வடிவமும் வனப்பும் நிறமும் தருவது யார்? மனிதன்தானே? மனிதனே கடவுளரைப் படைக்கிறான். சிலைகளாக வடிக்கிறான். தன்னைப் போலக் கண்களோடு மூக்கோடு - மனத்தோடும் தான்.-ஓஷோ
No comments:
Post a Comment