Osho Friends Kumbakonam: இரண்டு முதிய யூதர்கள்...

Tuesday, August 21, 2018

இரண்டு முதிய யூதர்கள்...


இரண்டு முதிய யூதர்கள் ஒரு பூங்காவினுள் ஆசனத்தில் உட்கார்ந்திருந்தார்களாம்.

‘’ரிடையர் ஆகிவிட்டாயே, என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’’ என்றார் ஒருவர்.

மற்றவர், ’’எனக்கு ஒரு பொழுது போக்கு இருக்கிறது. நான் புறாக்கள் வளர்க்கிறேனே,’’ என்றார்.

‘’புறாக்களா? எப்படி சாத்தியம்? நீ இருப்பதோ ஒரு விடுதியிலாயிற்றே,’’ என்றார் அவர்.

‘’ ஒர் அலமாரிக்குள் வைத்திருக்கிறேன்.’’

‘’ அலமாரிக்குள்ளா? உன்னுடைய உடைகளை எல்லாம் அசிங்கப்படுத்தி வைத்துவிடுமே.’’

‘’இல்லை. அவற்றை ஒரு பெட்டிக்குள் வைத்திருக்கிறேன்.

‘’பெட்டியா? எப்படி அவை மூச்சுவிட முடியும்?’’

‘’மூச்சு விடுவதா? எதற்கு? அவைதான் செத்துக் கிடக்கின்றனவே!’’

‘’செத்தா? செத்த புறாக்களையா வைத்திருக்கிறாய்?’’


‘’ அதுலே என்னப்பா இருக்குது. சும்மா ஒரு பொழுது போக்குத்தானே!’’ என்றார் அவர்.



பொழுது போக்குகளைத் தேடுவதை விட்டுவிட்டுச் சந்தர்ப்பங்களைத் தேடிப்பார். எப்போதேல்லாம் செய்வதற்கு ஒன்றுமில்லையோ அப்போதெல்லாம் உன்னோடேயே இருந்து பார். சும்மாயிருக்கும் போதேல்லாம் இதை முயன்று பார். உன்னோடு இருந்து பார். உனக்குள்ளே இருந்து பார். அதை விட்டு வெளியே வராமல் இருந்து பார். தபால் தலைகளைச் சேகரிக்க ஆரம்பித்து விடாதே.-ஓஷோ

No comments:

Post a Comment